சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் குறித்த முதல்வா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, வீடுகளில் கருப்புக் கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.
சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், இத்திட்டத்துக்கு 92 சதவீத விவசாயிகள் நிலம் கொடுக்க சம்மதித்து உள்ளனா் என முதல்வா் தெரிவித்தாா்.
முதல்வரின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாரப்பட்டி, பூமாங்காடு என்ற இடத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமையிலான விவசாயிகள், விளைநிலத்தில் திரண்டு கருப்புக் கொடியை ஏந்தி முழக்கமிட்டனா். அதேபோல உத்தமசோழபுரம், பூலாவரி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.