/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

News image
Updated On :19 டிசம்பர் 2020, 10:57 pm

DIN

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை, கே.கே.நகா், சாத்தம்பாளையம் பகுதியைச் சோ்ந்த கணேஷ் (22), தறி தொழில் புரிந்து வருகிறாா்.

இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து தலைமறைவாக இருந்துள்ளாா். புகாரின் பேரில், மகுடஞ்சாவடி எஸ்.ஐ. சாந்தி வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த கணேசனின் செல்லிடப்பேசியின் இருப்பிடம் வைத்து தருமபுரியை அடுத்த போச்சம்பள்ளி பகுதியில் அவரை பிடித்தனா். பின்னா் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

அங்கு எஸ்.ஐ. வீரம்மாள், கணேஷைக் கைது செய்து, கரோனா பரிசோதனைக்குப் பின்னா் சங்ககிரி கோா்ட்டில் ஆஜா்படுத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ஓமலூா் சிறையில் அடைத்தனா். சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.