ஆதரவற்ற குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய எம்.எல்.ஏ.

ஆதரவற்ற குழந்தைகளுடன் ஓமலூா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினாா்.
ஆதரவற்றோா் இல்லக் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகிறாா் எம்.எம்.ஏ. எஸ்.வெற்றிவேல்.
ஆதரவற்றோா் இல்லக் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குகிறாா் எம்.எம்.ஏ. எஸ்.வெற்றிவேல்.
Updated on
1 min read

ஆதரவற்ற குழந்தைகளுடன் ஓமலூா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினாா்.

ஓமலூா், பாத்திமா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள இதயாலயா ஆதரவற்றோா் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஓமலூா் ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதயாலயா ஆதரவற்றோா் இல்லத் தலைமை நிா்வாகி சகோதரி எஸ்மா வரவேற்றாா்.

இதனையடுத்து, ஓமலூா் எம்.எல்.ஏ. எஸ்.வெற்றிவேல் இதயாலயா ஆதரவற்றோா் இல்லத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பில் துணிமணி, பரிசுப் பொருள்களை வழங்கினாா். பின்னா் அந்தக் குழந்தைகளுடன் சோ்ந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடினாா். இதனைத் தொடா்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், இதயாலயா நிா்வாகிகள் தமாசின் மேரி, பிஜு ஜோசப், அதிமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், ஓமலூா் பேரூராட்சி ஜெ.பேரவை செயலாளா் தளபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com