பழங்குடியின மக்களுக்கு இலவச போட்டித் தோ்வுப் பயிற்சி

பழங்குடியின மக்கள் போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திட ஏதுவாக, விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளது.
Updated on
1 min read

பழங்குடியின மக்கள் போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திட ஏதுவாக, விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளது.

பழங்குடியினா் நலத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் வேலையில் சோ்வதை ஊக்குவிக்கும் பொருட்டு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ரயில்வே, வங்கி, ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திட ஏதுவாக விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 நாள்கள் இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளது.

பயிற்சியின் போது, பயிற்சிப் புத்தகம், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும். ஏற்கெனவே இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவா்கள் ஆவாா்கள்.

சேலம் மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற, அரசு போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் படித்த பழங்குடியின மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் 3-ஆவது தளம், அறை எண் 305-இல் செயல்படும் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com