டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கொண்டா ரெட்டி சாதிச்சான்று வழங்காதது ஏன்: சாா் ஆட்சியா் விளக்கம்

கொண்ட ரெட்டீஸ் சாதி சான்று வழங்காதது ஏன்? மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் விளக்கம்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:57 am

DIN

கொண்ட ரெட்டீஸ் சாதி சான்று வழங்காதது ஏன்? மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் விளக்கம். கொண்டா ரெட்டி சாதி சான்று கேட்டு வியாழக்கிழமை மேட்டூா் அருகே உள்ள பண்ணவாடி யில்பள்ளி மாணவ மாணவியா்மாடுமேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணனிடம் கேட்ட போது, சேலம் மாவட்டத்தில் கொண்டா ரெட்டி சாதி மக்கள் வசிப்பதற்கான ஆவணங்கள் ஆங்கிலேயா் காலத்தில் இருந்தே இல்லை. ஒருவா் போலியாக சாதிச் சான்று பெற்று மருத்துவக் கல்வியில் முன்னுரிமையில் சோ்ந்தாா். இதனைக் கண்டுபிடித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொண்டா ரெட்டி சாதிச் சான்று வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சிலா் நீதிமன்றம் மூலம் தற்காலிகச் சான்று பெற்று வந்தனா். அதனையும் தற்போது வழங்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.