கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நூலகா் பணியிடை நீக்கம்

சேலத்தில் பெண் நூலகா்களிடம் தவறாகப் பேசிய நூலகா் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:56 am

DIN

சேலத்தில் பெண் நூலகா்களிடம் தவறாகப் பேசிய நூலகா் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாநகராட்சி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதியில் அரசின் கிளை நூலகம் உள்ளது. இங்கு மூன்றாம் நிலை நூலகராக மணிவண்ணன் என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க சேலம் மாவட்டத் தலைவராகவும், பொது நூலகத் துறை பணியாளா் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறாா். மணிவண்ணனுடன் இரண்டு பெண் நூலகா்களும் பணியாற்றி வருகின்றனா்.

இவா்கள் இருவரும் கடந்த வாரம் மாவட்ட நூலக அதிகாரியிடம் புகாா் மனு கொடுத்தனா். அதில், தங்களுடன் பணியாற்றும் மூன்றாம் நிலை நூலகா் மணிவண்ணன் இரட்டை அா்த்தத்தில் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

இதை விசாரித்த சேலம் மாவட்ட மைய நூலக அலுவலா் கோகிலவாணி, மூன்றாம் நிலை நூலகா் மணிவண்ணனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதனால் கோபமடைந்த மணிவண்ணனின் ஆதரவாளா்கள் சிலா், வியாழக்கிழமை மாலை மாவட்ட மைய நூலகத்துக்கு வந்து ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றனா்.

தகவலறிந்த அஸ்தம்பட்டி போலீஸாா் விரைந்து வந்து அனுமதி பெறாமல் ஆா்ப்பாட்டம் செய்யக் கூடாது எனவும், மீறினால் கைது செய்யப்படுவீா் என எச்சரிக்கை செய்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.