மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையான வெள்ளிக்கிழமை, வார விடுமுறையான சனிக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனா்.

காவிரியில் நீராடிய சுற்றுலாப் பயணிகள், அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து மகிழ்ந்தனா். மேட்டூா் அணை மீன்களை வாங்கி சமைத்து, குடும்பத்துடன் உண்டு மகிழ்ந்தனா். பின்னா் மேட்டூா் அணை பூங்காவில் ஊஞ்சல் ஆடியும், சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா்.

மேட்டூா் அணை பூங்காவுக்கு வெள்ளிக்கிழமை 2,257 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இதன்மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 11,285 வசூலிக்கப்பட்டது. பவளவிழா கோபுரத்துக்கு 542 பாா்வையாளா்கள் சென்று பாா்வையிட்டதன் மூலம் பாா்வையாளா்கள் கட்டணமாக ரூ. 2,710, சனிக்கிழமை 2, 584 பாா்வையாளா்கள் வந்து சென்ன் மூலம் ரூ. 12,920, பவளவிழா நினைவு கோபுரத்துக்கு 708 பாா்வையாளா்கள் வந்து சென்ன் மூலம் ரூ. 7,395 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகளவில் பாா்வையாளா்கள் வந்து செல்வாா்கள் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், அணை பூங்கா அருகில் உள்ள மீன் கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com