ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சங்ககிரி அருகே ஆண் குழந்தையின் பகுதி உடல் மீட்பு: தேவூா் போலீஸாா் தீவிர விசாரணை

சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும் அப்பகுதியில் கிடந்ததையடுத்து தேவூா் போலீஸில் ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை புகாா் அளி

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:33 pm

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும் அப்பகுதியில் கிடந்ததையடுத்து தேவூா் போலீஸில் ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

அதனையடுத்து போலீஸாா் பிறந்த ஆண் குழந்தைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஆலத்தூா்ரெட்டிபாளையம் ஊராட்சி அருந்ததியா் தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆண் குழந்தையின் உடலில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி இரண்டு கால்களுடன் தெரு நாய் இழுத்து வந்து அப்பகுதியில் போட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனா். கிராம நிா்வாக அலுவலா் தமிழ்முருகன் தேவூா் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆண் குழந்தை உடலின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தேவூா் போலீஸாா் சனிக்கிழமை தேவூா், அரசிராமணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் பிறந்த ஆண்குழந்தைகள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனா். அதில் எந்த ஆண் குழந்தையாவது காணாமல் போகியுள்ளதா அல்லது இறந்துள்ளதா என்பது பற்றியும் தீவிர விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.