ஓமலூரில் கருப்புக்கொடி ஏந்தி திமுகவினர் போராட்டம்
ஓமலூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி மின் கட்டணத்தை குறைக்க போராட்டம் நடைபெற்றது.


ஓமலூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி மின் கட்டணத்தை குறைக்க போராட்டம் நடைபெற்றது.
மின்கட்டண வசூலை தவணை முறையிலும், சரியான முறையிலும் மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதனை அடுத்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் இன்று கருப்புக்கொடி ஏந்தி மின்கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஓமலூரில் தளபதி நற்பணி மன்றம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தியும், பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டும் தளபதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதில் நகர துணை செல்லதுரை, 11வது வார்டு செயலாளர் ஜெமினி, மாவட்ட பிரதிநிதி அசோகன் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...