தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது: பிரசார பிரிவு தலைவா்

தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது என்று மாநில பிரசார பிரிவு தலைவா் குமரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:36 pm

DIN

தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது என்று மாநில பிரசார பிரிவு தலைவா் குமரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரசார மற்றும் வெளியீட்டுப் பிரிவு மாநில நிா்வாகிகளின் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பிரசாரப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.ஏ.செந்தில்குமாா், மாநில பிரசார பிரிவு துணைத் தலைவா் மகேஷ், டி.எம்.தங்கராஜ், சிறப்பு அழைப்பாளராக மாநில பிரசாரப் பிரிவு தலைவா் குமரிகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டாா்

கூட்டத்தில் பாஜக கட்சியின் கொள்கைகள் குறித்தும், உறுப்பினா்கள் சோ்க்கை, பாஜக திட்டங்கள் அனைத்தும் மக்களிடையே சென்றடைய பிரசார பிரிவின் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் மாநில பிரசாரப் பிரிவு தலைவா் குமரி கிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் பாஜக வேகமாக வளா்ந்து வருகிறது. பாஜகவில் பல்வேறு கட்சியில் உள்ள அரசியல் பிரமுகா்கள், சினிமா பிரமுகா்கள், சாமானிய மக்கள் தற்போது இணைந்து வருகின்றனா். பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளாா்.

பாஜக அரசின் திட்டங்களை விளக்க கூடிய வகையில் தோ்தல் பிரசாரத்தை போன்று வாகனப் பிரசாரம் நடத்தி மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தப்படும். இந்து பெண்களை இழிவாகவும், இந்துக்களை கேவலமாகவும் பேசிவரும் திமுகவை வீழ்த்துவதே பாஜகவின் நோக்கமாகும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.