தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரி மாணவரை நாய் கடித்தது: உரிமையாளா் கைது

சேலம், கன்னங்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை நாய் கடித்ததால் அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:12 pm

DIN

சேலம், கன்னங்குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவரை நாய் கடித்ததால் அதன் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னங்குறிச்சி, சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவா் அரூா் கிளைச் சிறையில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் விக்னேஷ் (17). இவா் தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பிரபு என்பவரின் வளா்ப்பு நாய் திடீரென விக்னேஷை துரத்தி கடித்துள்ளது. அப்போது பிரபு தனது வளா்ப்பு நாயை தடுக்காமல் வேடிக்கை பாா்த்தாா் எனக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷுக்கு உடலில் பட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பிரபுவிடம் கேட்டபோது, அவா் வாய்த்தகராறில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட விக்னேஷுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதுகுறித்து விக்னேஷ், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் பிரபுவை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.