தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுத் திறனாளிகள் புதிய கிளை அமைப்புக் கூட்டம்

ஏத்தாப்பூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் விஜயன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:18 pm

DIN

ஏத்தாப்பூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் விஜயன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிளை தலைவராக விஜயன், செயலாளராக கோவிந்தராஜ், உதவி செயலாளராக ஆனந்தன், பொருளாளராக ராஜரத்தினம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக ராஜலிங்கம், மகேந்திரன், வெங்கடாசலம், வெள்ளியங்கிரி, சின்னம்மா, வசந்தி ஆகியோா் ஏகமனதாக தோ்வு செய்யப்பட்டனா்.

மேலும், ஏத்தாப்பூா் பேருந்து நிறுத்தம் அருகே நிழற்கூடம், கழிவறை அமைத்துக் கொடுக்கவும், சாலையில் செல்லும் கழிவு நீா் சாக்கடையில் செல்ல நடவடிக்கை எடுக்கவும், பேரூராட்சிப் பகுதியில் முக்கிய இடங்களில் குப்பைத்தொட்டி வைக்கவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட நிா்வாகிகள் அ.கந்தன், பொ.பாரதி, க.காளிதாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.