தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் மீது காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:17 pm

DIN

தில்லியில் நடைபெற்ற பேரணியில் விவசாயிகள் மீது காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் விவசாய விரோதப் போக்கைக் கண்டித்து தில்லியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது காவல் துறையினா் தாக்குதல் நடத்தினா்.

இந்த தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், அதிமுக அரசு மத்திய அரசுக்கு துணைப் போகக்கூடாது, விவசாயிகளை அழிக்க நினைக்கும் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. டி. கண்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளா் மாரியப்பன், சேலம் மாவட்டச் செயலாளா் கவின்ராஜ், மாவட்ட தலைவா் பகத்சிங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.