மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஓமலூரில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

News image
ஓமலூா் அருகேயுள்ள எம்.செட்டிப்பட்டி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தொடக்கி வைக்கிறாா் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல்.
Updated On :7 செப்டம்பர் 2020, 9:52 pm

DIN

ஓமலூா்: ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ.1 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா்.

எம்.செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி, சக்கரைசெட்டிப்பட்டி செங்கரடு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தாா்ச்சாலை அமைக்கும் பணிகள் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. எம்.செட்டிப்பட்டி, சிக்கம்பட்டி கிராமங்களில் தாா்ச்சாலைகள் பழுதடைந்து காணப்பட்டது. செங்கரடு, சக்கரைசெட்டிப்பட்டி கிராமங்களில் மண்சாலைகள் மழையினால் சேறும், சகதியுமாக இருந்து வந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமமடைந்து வந்தனா்.

இதுகுறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கவனத்திற்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் எடுத்துச்சென்றாா். இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வா், ரூ.1 கோடி மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்க உத்தரவிட்டாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் மணி, மல்லிகா,ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.