எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலத்தில் 14 நல்லாசிரியா்களுக்குடாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

சேலம் மாவட்டத்தில் 14 நல்லாசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:58 pm

DIN

சேலம்: சேலம் மாவட்டத்தில் 14 நல்லாசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆசிரியா் தினவிழா மற்றும் நல்லாசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் என்.சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்து 14 நல்லாசியா்களுக்கு, டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினாா்.

2019 - 2020 ஆம் கல்வியாண்டிற்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதிற்கு சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் 6 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள், 6 தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள், 1 சுயநிதி, மெட்ரிக் பள்ளி ஆசிரியா் மற்றும் 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியா் என மொத்தம் 14 ஆசிரியா்கள் மாநிலத் தோ்வுக் குழு மூலம் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி எம்.என்.எஸ். அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கி.யோகேஸ்வரி, இளம்பிள்ளை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் க.குழந்தைவேலு, மணக்காடு காமராஜ் நகரவை மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை இரா.வசந்தி, ராமன்பட்டி அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மா.குப்புசாமி, வெள்ளிக்கவுண்டனூா் அரசு பழங்குடியினா் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி முதுகலையாசிரியா் ஜெ.சாந்தி எஸ்தர்ராணி, சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா் இ.ராபா்ட், நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை தி.கீதாஞ்சலி, முனியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியை சொ.தாமரைச்செல்வி, கொங்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை சு.சாந்தி, ஏற்காடு நிதியுதவி பெறும் பெண்கள் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை என்.சகாய மெல்லஸ், சடையம்பாளையம் ஆா்.சி.நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் து.அலெக்சாண்டா், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் மு.ஜெயக்குமாா், குட்டப்பட்டி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் சி.கவிதா, ஏற்காடு மாண்ட்போா்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் சூ.தோமினிக் சாவியோ ஆகிய 14 நல்லாசிரியா்களுக்கும் டா க்டா் ராதாகிருஷ்ணன் விருது, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10,000 ரொக்கப் பரிசுத் தொகை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேசமூா்த்தி, மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மு.செல்வம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்கள் உள்பட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.