ஓமலூரில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சேலம் மேற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் ஓமலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொறுப்பாளா்கள் மணி, விஜயகுமாா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் கூட்டத்தின் தீா்மானங்களை வாசித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசியதாவது:
மாணவா்கள் மன வலிமை மிக்கவா்களாக உருவாக வேண்டும். இதற்காக மாணவா்களுக்கு விவேகானந்தரின் வாழ்வியல் குறித்தும், மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்கள் குறித்தும் போதிக்க வேண்டும் என்றாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரும் கட்சிக்கு ஆதரவளிப்பது, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை அரசு மீட்க வேண்டும். ஒன்றியம், பஞ்சாயத்து என அனைத்துப் பகுதிகளிலும் இந்து முன்னணியின் கிளைகளை அமைப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...