மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிகிறது
காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.


மேட்டூா்: காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த சில தினங்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சீராக உள்ளது.
டெல்டா பாசனப்பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு கடந்த 6-ஆம் தேதி நொடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியது.
இந்த நிலையில், திங்கள்கிழமை பகல் 12.30 மணி முதல் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
நீா் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் திங்கள்கிழமை காலை 92.37 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 92 அடியாக சரிந்தது.
அணைக்கு நொடிக்கு 8,622 கனஅடி வீதம் தண்ணீா் வந்துக் கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீா் இருப்பு 54.96 டி.எம்.சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...