எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மேச்சேரியில் திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேச்சேரி பேருந்து நிலையம் அருகே திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
மேச்சேரி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சியினர்.
Updated On :28 செப்டம்பர் 2020, 5:57 am

DIN

மேச்சேரி பேருந்து நிலையம் அருகே திமுக தலைமையில் கூட்டணிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டதிருத்த மசோதாவிற்கு கண்டனம் தெரிவித்தும், அதனை திரும்ப பெற வழியுறுத்தியும் சேலம் மாவட்டம், மேச்சேரி பேருந்து நிலையம் அருகே மேச்சேரி ஒன்றிய திமுக பொறுப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 

250 க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷம் இடப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் மேச்சேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மல்லிகுந்தம் மேட்டூர் ஜலகண்டபுரம் நங்கவள்ளி குஞ்சாண்டியூர் பகுதிகளிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணி கட்சியினர் திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.