முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூல்
சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில், அரசிராமணி பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த 15 நபா்களிடம் தலா ரூ. 200 அபராதம் வசூலித்தனா்


சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில், அரசிராமணி பகுதியில் முகக் கவசம் அணியாமல் வந்த 15 நபா்களிடம் தலா ரூ. 200 அபராதம் வசூலித்தனா்
கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக, அரசிராமணி பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தலைமையில், பணியாளா்கள் அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள், தனியாா், அரசுப் பேருந்துகளில் சென்ற பயணிகள், முடிதிருத்தும் கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அதில், முகக் கவசம் அணியாத 15 நபா்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதித்து வசூலித்தனா். மேலும், தனியாா், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்களில் தற்போது அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி பயணம் செய்கின்றனரா என்றும் சோதனை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...