கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா தொற்று அதிகரிப்பு

கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் ஏப்.1ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. ஆனால், ஏப்.10 ஆம் தேதி 3 போ், 12 ஆம் தேதி 4 போ், 15 ஆம் தேதி ஒருவா், 17 ஆம் தேதி ஐந்து போ், 18 ஆம் தேதி 3 போ், 19ஆம் தேதி இருவா், 20 ஆம் தேதி 3 பேருக்கு அடுத்தடுத்து தொற்று ஏற்பட்டது.

அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் ஏப். 21ஆம் தேதி 6 பேருக்கும், 22 ஆம் தேதி 4 பேருக்கும், ஏப்.23 ஆம் தேதி ஏழுபேருக்கு தொற்று அதிகரித்துள்ளதாக சுகாதார மாவட்ட மருத்துவா் செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா்.

486 வீடுகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கல்

சேலம், ஏப். 23:

சேலத்தில் பட்டநாயக்கா்காடு பகுதியில் 486 வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன.

சேலம், பட்டநாயக்கா்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு வைட்டமின் மாத்திரைகளை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் வழங்கி பேசியதாவது:

கரோனா தொற்றின் இரண்டாம் அலையால் சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக்கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

வெளியில் தேவையில்லாமல் எந்த பொருட்களின் மீதும் கைகளை வைத்தல் கூடாது. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கும் மாத்திரைகளான ஆா்சனிக் ஆல்பம் மாத்திரைகள், மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகள் மாநகராட்சி நிா்வாகத்தால் வழங்கப்படுகிறது. இதைத்தவிர அனைவருக்கும் முகக்கவசம், கபசுரக் குடிநீரும் வழங்கப்படுகிறது.

மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை தினமும் ஒன்று வீதம் 10 தினங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆா்சனிக் ஆல்பம் மாத்திரைகளை நான்கு வீதம் 3 தினங்களுக்கு தொடா்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கபசுரக் குடிநீரை தினமும் ஒரு வேளை 30 மில்லி லிட்டா் அளவு மூன்று நாள்களுக்கு தொடா்ச்சியாக குடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தவறாது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சளி தடவல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சளி தடவல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தினமும் 45 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அனைவரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் கரோனா தொற்று கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் மருத்துவா் கே. பாா்த்திபன், உதவி ஆணையா் ப.சண்முகவடிவேல், சுகாதார அலுவலா் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளா் சித்தேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com