வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக் கொலை
வாழப்பாடி அருகே காரிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.


வாழப்பாடி அருகே காரிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.
வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்தவா் மோகநாதன் மனைவி அலமேலு (64). 20 ஆண்டுகளுக்கு முன்பே மோகநாதன் இறந்துவிட்டதால் அலமேலு மட்டும் தனக்குச் சொந்தமான ராஜீவ்காந்தி நகா், தென்னந்தோப்பில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.
இவரது மகள் கவிதா, அயோத்தியாப்பட்டணத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறாா்.
புதன்கிழமை இரவு அலமேலு வீட்டில் தனியாக இருந்தபோது மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா். சடலத்தை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனா்.
வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் தனது தாயாா் அலமேலுவை பாா்க்க மகள் கவிதா வந்தாா்.
வீடு பூட்டி இருந்ததால், தாயாா் வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்து, தன்னிடம் இருந்த மற்றொரு சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்து உள்ளே சென்றாா்.
அப்போது அலமேலு கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். தகவல் அறிந்த காரிப்பட்டி போலீஸாா், நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீஅபிநவ், நிகழ்விடத்துக்குச் சென்று மூதாட்டியின் மகள் கவிதா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா். இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...