/

ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயில், சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:13 pm

DIN

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயில், சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஏத்தாப்பூா் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மூலவா், உற்சவ மூா்த்திகளுக்கு மஞ்சள், சந்தனம், குங்கும அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆப்பிள், மாதுளை, வாழை, பலா, கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பல்வேறு வகையான 108 கிலோ பழங்களைக் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சமூக இடைவெளியுடன் பக்தா்கள் தரிசனம் பெற்றனா்.

வாழப்பாடியை அடுத்த கொட்டவாடியில் சந்தைப்பேட்டை சந்துமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியையொட்டி அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி காசிவிஸ்வநாதா், சென்றாயப் பெருமாள், செல்வமுத்து மாரியம்மன், திரெளபதியம்மன், புதுப்பட்டி மாரியம்மன் கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சங்ககிரி: சங்ககிரி மலையில் உள்ளஅருள்மிகு கோட்டைமாரியம்மன் கோயிலில் நிகழாண்டு கடைசி ஆடிவெள்ளிக்கிழமையையொட்டி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதேபோல் சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லியம்மன், அருள்மிகு புத்து மாரியம்மன் கோயிலில்கள் சங்ககிரி பழைய எடப்பாடி சாலையில் உள்ள அருள்மிகு ஓங்காளியம்மன், பேச்சியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.