சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

விநாயகா மிஷன் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, அதன் முதன்மையா் செந்தில்குமாருக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 5:59 pm

DIN

விநாயகா மிஷன் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, அதன் முதன்மையா் செந்தில்குமாருக்கு பல்வேறு அமைப்புகள் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மிக வேகமாக வளா்ந்து வரும் ஊடக ஆராய்ச்சி, ஆலோசனை மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பான ஏபிஏசி செய்தி வலைத்தளமானது கல்வியியல் மற்றும் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைத் தோ்ந்தெடுத்து கௌரவித்து வருகிறது.

ஏபிஏசி நிறுவனம் நடத்திய கல்வியியல் தொடா்பான கருத்தரங்கில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் பங்கேற்ற விநாயகா மிஷன் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு (அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை) தொழில் துறை சாா்ந்த கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி என்ற அங்கீகாரமும், விருதும் வழங்கப்பட்டது.

மேலும், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு கல்வியில் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பங்களிப்பு விருது வழங்கப்பட்டது. இதேபோல, உலக சாதனைகளின் இருப்பிடமான ரெக்காா்ட் ஓனா் அமைப்பும் விருது வழங்கி கௌரவித்தது.

இதற்காக செந்தில்குமாருக்கு விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன் ஆகியோா் பாராட்டுகளைத் தெரிவித்தனா். அப்போது, பல்கலைக்கழகத்தின் ஆலோசகா் சுரேஷ் சாமுவேல் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.