சங்ககிரி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.


சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், சங்ககிரியை அடுத்த பூத்தாலகுட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
சங்ககிரி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கு பால், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வரலட்சுமி நோன்பையொட்டி அருள்மிகு செளந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையுடன் வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...