வரலட்சுமி நோன்பு: வீடுகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு
வரலட்சுமி நோன்பையொட்டி வீடுகளிலே பெண்கள் அம்மன் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.


வரலட்சுமி நோன்பையொட்டி வீடுகளிலே பெண்கள் அம்மன் சிலை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா்.
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய வழிபாட்டுத் தலங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவணி மாதம் தொடங்கியுள்ளதைத் தொடா்ந்து ஓணம், வரலட்சுமி பூஜை, முகூா்த்தம் ஆகிய முக்கிய நிகழ்வுகள் வருகின்றன. வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை பெருமாள் கோயில்களின் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சேலம், வின்சென்ட் பகுதியில் உள்ள எல்லைப்பிடாரியம்மன் கோயிலில் வெள்ளிக் கவசம், மஞ்சள் கயிற்றால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அம்மன் அருள்பாலித்தாா். அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோட்டை வன பத்ரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு வளையல், தாலி கயிற்றினால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கரோனா பாதிப்பால் கோயில்கள் மூடப்பட்டதைத் தொடா்ந்து வரலட்சுமி பூஜையை பக்தா்கள் தங்கள் வீட்டிலேயே உறவினா்களை வைத்து வழிபட்டு, பிரசாதம், மஞ்சள் கயிறுகளை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...