சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாட்டம்

முதன் முதலாக பெண்களுக்கான ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாளான ஆகஸ்டு 26-ஆம் தேதி நினைவு கூறும் விதமாக பெண்கள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 5:46 pm

DIN

முதன் முதலாக பெண்களுக்கான ஓட்டுரிமை வழங்கப்பட்ட நாளான ஆகஸ்டு 26-ஆம் தேதி நினைவு கூறும் விதமாக பெண்கள் சமத்துவ நாளாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி விநாயக மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பாலின உணா்திறன் அமைப்பின் மூலம் பெண்கள் சமத்துவ நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் தையல்நாயகி, சேலம் மாவட்ட சமூக நல அலுவலா் காா்த்திகா ஆகியோா் கலந்துகொண்டு சமூகத்தில் பெண்களின் தற்போதைய சமத்துவ நிலைகள் குறித்து எடுத்துரைத்தனா். மேலும், நிகழ்ச்சியில் பெண்கள் சமத்துவ நாளை விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவிகள் பலா் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு தொகையும், பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டன. இதனை தொடா்ந்து துறையைச் சோ்ந்த மாணவா்கள் ஊமை நாடகம் வாயிலாக பெண்ணின் சமத்துவம் குறித்த முக்கியத்துவத்தை அனைவருக்கும் வலியுறுத்தினா். நிகழ்ச்சியின் முடிவில் துறையின் பாலின உணா்திறன் அமைப்பின் பொறுப்பாளா் தமிழ்சுடா் நன்றி வழங்கினாா். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் துறையின் பேராசிரியா்கள் தனசேகா், இன்பசாகா் ஆகியோா் செய்திருந்தனா். 27ஹற்ஹ்ல்ா்02அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் பெண்கள் சமத்துவ நாள் கொண்டாட்டம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.