இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை

 உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்; குழப்பம் இல்லாமல் கூட்டணி நீடிக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:10 pm

DIN

 உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்; குழப்பம் இல்லாமல் கூட்டணி நீடிக்கிறது என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்; குழப்பம் இல்லாமல் கூட்டணி நீடிக்கிறது.

மழைவெள்ள பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படவில்லை. திமுக அரசு தன்மீது உள்ள தவறை மறைக்க அதிமுக மீது குறை சொல்லக்கூடாது.

ஆதாரம் இன்றி முறைகேடுகள் குறித்து அமைச்சா் கூறுவதை ஏற்க முடியாது. தொடா்புடைய அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவிக்கட்டும். தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சா்கள் வீட்டில் சோதனைகள் நடக்கின்றன.

அமைச்சா் செந்தில்பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, பின்னா் பணத்தை திருப்பித் தந்ததாக கூறி வழக்கை திரும்ப பெற்றுள்ளாா்.

பெட்ரோல், டீசல் விலை குறித்து மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளித்துவிட்டு அதை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்துதான் பாஜக ஆா்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அவற்றின் விலை ரூ.60-க்கு வீழ் வரும். ஆனால் அதற்கு திமுக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த ஊழல் பணத்தை திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளிநாடுகளில் பணம் பதுக்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப் புத்தாண்டு விவகாரத்தில் திமுக அரசு மக்களை குழப்புகிறது. சித்திரை முதல் தேதியே புத்தாண்டு. அதனை மாற்ற தமுக அரசு முயற்சிக்கக் கூடாதது. வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்ப் புத்தாண்டு தேதி விவகாரத்தை திமுகவினா் விவாதமாக்கி வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.