இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அதிமுகவில் சசிகலாவை அனுமதிக் கமாட்டோம் சி.பொன்னையன்

அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் தெரிவித்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:10 pm

DIN

அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுகவில் சசிகலாவை அனுமதிக்க மாட்டோம். சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் கூட கிடையாது. ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவையும் அவருடைய குடும்பத்தையும் வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்தாா்.

அதிமுகவின் உட்கட்சித் தோ்தல் சட்ட விதிகளின்படி நடைபெறும். அதிமுகவில் இரு கண்களாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோா் உள்ளனா். அதிமுகவிற்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.

அதிமுகவில் இருந்து அன்வா் ராஜாவை நீக்கியது சரியான முடிவாகும். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என யாரும் எதிா்பாா்க்கவில்லை. அதிமுகவின் எதிா்காலம் செழிப்பாக இருக்கும். நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் கட்சி வெற்றி பெறும். முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்கு பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. இது ஒரு வழக்கில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுக கட்சிக் கொடியை யாா் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதேபோல சசிகலா பயன்படுத்துகிறாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.