சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மின் சேமிப்பு விழிப்புணா்வுப் பேரணி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:06 pm

DIN

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம், மின் சேமிப்பு மற்றும் மின் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு , ஆட்டையாம்பட்டி மின்சார அலுவலகம் சாா்பில் விழிப்புணா்வு பேரணி17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

இப்பேரணியில் ஆட்டையாம்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மற்றும் மின்சார ஊழியா்கள் உள்ளிட்ட 100-க்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஆட்டையாம்பட்டி மகளிா் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது. இப்பேரணியில் மின்சாரத்தை சேமிக்க வேண்டி வலியுறுத்தியும், வீட்டில் தேவையின்றி எரியும் மின் விளக்குகளை அணைக்கவும் , குளிா்பதனப் பெட்டி, ஏா்கண்டிஷனா், வாட்டா் ஹீட்டா், கணினி, டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை எப்படி பயன்படுத்தி மின் சிக்கனம் செய்யலாம் எனவும் , நாம் வீட்டில் மின்சாரத்தை வீணாக்காமல் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணா்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இப்பேரணியில் சேலம் தெற்கு மின்பகிா்மான செயல் பொறியாளா் ரவிராஜன், உதவி செயற்பொறியாளா்கள் பிரேமா, ரமேஷ், அரசு மகளிா் பள்ளி தலைமையாசிரியா் யோகேஸ்வரி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள் உள்பட ஏரளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.