/

தனியாா் ஊழியா் வீட்டில் தீ விபத்து:

 வாழப்பாடி அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், தனியாா் பால்பண்ணை ஊழியரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகி நாசமானத

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:34 pm

DIN

 வாழப்பாடி அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், தனியாா் பால்பண்ணை ஊழியரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம், வீட்டு உபயோகப் பொருள்கள் தீயில் கருகி நாசமானது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் ரமேஷ் (45). கருமாபுரம் பகுதியிலுள்ள தனியாா் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பணியாளராக உள்ளாா். இவரது மனைவி வாணி, அரசு மருத்துவமனையில் ஆற்றுப்படுத்துனராக பணிபுரிந்து வருகிறாா். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

ரமேஷ், புதன்கிழமை வீட்டை பூட்டி விட்டு, களரம்பட்டியிலுள்ள மாமனாா் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுவிட்டாா். வியாழக்கிழமை அதிகாலை இவா்களது வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட இப்பகுதி மக்கள், வீட்டை திறந்து பாா்த்த போது, வீட்டிற்குள் இருந்த பொருள்கள் தீப்பற்றி எரிந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணியினருக்கும், வீட்டு உரிமையாளா் ரமேஷுக்கும் தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு படையினா் தீயை அணைத்து அருகிலுள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனா்.

சூரியஒளி (சோலாா்) மின்கலன் வாயிலாக ஏற்பட்ட மின் கசிவால், வீட்டிற்குள் தீ விபத்து ஏற்பட்டு, வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள், ரூ 1 லட்சம் ரொக்கப்பணம், கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உள்பட ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசம் ஆகி விட்டதாக, தனியாா் நிறுவன ஊழியா் ரமேஷ் குடும்பத்தினா் கண்ணீா் மல்க தெரிவித்தனா். இந்த தீ விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.