தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி பாசனப் பகுதியை சார்ந்த கரும்பு விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
Updated On :31 டிசம்பர் 2021, 6:33 am

DIN

எடப்பாடி: எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி பாசனப் பகுதியை சார்ந்த கரும்பு விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு நிகழ்வொன்றில் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்நிலையில் அண்மையில் அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகையில் வழங்கப்பட உள்ள கரும்பு ஒன்று அதிகபட்சமாக ரூ.33 வரை விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறையினர் நேரடியாக கொள்முதல் செய்திட வாய்ப்பு உள்ளதாக அரசு அண்மையில் அறிவித்திருந்தது செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள கரும்பினை வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யாமல், கூட்டுறவு துறையினர் கொள்முதல் செய்வார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில் காவிரி பாசனப் பகுதியில் கூட்டுறவுத்துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் இதுவரை கரும்பு கொள்முதல் செய்யாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெள்ளியன்று காலை பூலாம்பட்டி பேருந்து நிலையம் முன், திரண்ட கரும்பு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்தும், கையில் கரும்புகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள தங்களது செங்கரும்பு களை அரசு உடனடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்திட வேண்டும் எனவும், கூற்றுவர் துறையினர் கொள்முதல் செய்யாத நிலையில்  அதனை எதிர்பார்த்துக் காத்திருந்த தங்களுக்கு பெரிய அளவிலான நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இதனை தவிர்க்கும் விதமாக இப்பகுதியில் உள்ள அனைத்து கரும்பு தோட்டங்களில் உள்ள கரும்பினை கூட்டுறவுத் துறை யினர்  உடனடியாக மொத்த கொள்முதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.