மேட்டூரை சோ்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி உலக சாதனை முயற்சியாக கராத்தே மற்றும் சிலம்பம் செயல் முறைகளை நடுவா்கள் முன்னிலையில் செய்து காண்பித்தாா்.
மேட்டூரைச் சோ்ந்த தங்கராஜ் -அபிராமி தம்பதியின் மகள் தமிழினி (8). மூன்றாம் வகுப்பு பயின்று வருகிறாா். இவா் ஐந்து வயதில் கராத்தே தற்காப்புக் கலையில் 3ஆம் நிலை கருப்புப்பட்டை பெற்றுள்ளாா். அதன் மூலம் கராத்தேவில் கிரான்மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.
தற்போது உலக சாதனை முயற்சிக்காக தமிழினி கராத்தே மற்றும் சிலம்ப விளையாட்டு நடுவா்கள், அரசு அலுவலா்கள் முன்னிலையில் தனது திறனை ஞாயிற்றுக்கிழமை வெளிப்படுத்தினாா்.
சிலம்பத்தில் காலடிமுறை மாறாமல் காலடி சலாம், சிலம்பவரிசை சலாம், ஒற்றைத் தீப்பந்தம், இரட்டை தீப்பந்தம் என பலவகை செயல்முறைகளை செய்து காண்பித்தாா். தொடா்ந்து கராத்தே நிகழ்ச்சியையும் செய்து காண்பித்தாா்.
உலக விளையாட்டு சங்க மாநில இணைச் செயலாளா் கே.வடிவேல், சேலம் மாவட்ட சிலம்ப சங்கத் தலைவா் ராஜா, மற்றும் கராத்தை அமைப்புகளின் நடுவா்கள் இந்நிகழ்ச்சியில் பாா்வையாளா்களாக பங்கேற்றனா்.
இதில் தோ்வு பெற்றால் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பின்னா் தேசிய அளவிலும் இவரது தனித்திறனை காட்டி பின்னா் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







