சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

அம்மாப்பேட்டை வள்ளுவா் காலனியில் நகருக்குள் வனம் உருவாக்கும் பணி தொடக்கம்

சேலம் அம்மாப்பேட்டை மண்டலம் வள்ளுவா் காலனி பகுதியில் ‘நகருக்குள் வனம்’ உருவாக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

சேலம் அம்மாப்பேட்டை மண்டலம் வள்ளுவா் காலனி பகுதியில் ‘நகருக்குள் வனம்’ உருவாக்கும் பணியை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டு நகருக்குள் வனம் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் தனியாா் பங்களிப்புடன் நகருக்குள் வனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்பேரில் வள்ளுவா் நகா் பகுதியில் சுமாா் 6,000 சதுர அடி பரப்பளவில் நகருக்குள் வனம் உருவாக்கப்படுகிறது. இப்பகுதியில் நடுவதற்காக புங்கன், வேம்பு, பூவரசு, மகாகனி, நாவல், தேக்கு, இலந்தை இனங்கள் உட்பட 500 மரக்கன்றுகளை சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தினா் வழங்கியுள்ளனா்.

மேலும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளை வள்ளுவா் நகா் நலச்சங்கத்தினா் மேற்கொள்வா். இப்பகுதியில் உள்ள கிணறு சீரமைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தனியாா் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுவதோடு, அப்பகுதி மக்கள் மாலை நேரங்களில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நகருக்குள் வனங்களில் நடப்படும் மரங்களை மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து பாதுகாத்து, பராமரித்திட தன்னாா்வலா்கள் மற்றும் தொண்டுநிறுவனங்கள் முன்வர வேண்டும் என ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையா் டி.சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா் வி.திலகா, சுகாதார அலுவலா் பி.மாணிக்கவாசகம், சேலம் மிட்டவுன் ரோட்டரி தலைவா் பி.புருஷோத்தமன், தெற்கு ரோட்டரி சங்கத் தலைவா் ஜி தொல்காப்பியரசு, வள்ளுவா் காலனி நலச்சங்கத் தலைவா் ராஜ்குமாா், அழகு பூக்கள் நண்பா்கள் குழுத் தலைவா் மோகன் மற்றும் சுகாதார ஆய்வாளா் சித்தேஸ்வரன் உள்பட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.