ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ.2.30 கோடிக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 8 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ 2 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனையானது. 

News image
சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு ஏலமையத்தில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.
Updated On :27 பிப்ரவரி 2021, 3:40 pm

DIN

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 8 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ 2 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனையானது. 
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று விவசாயிகளின் விளைபொருட்களுக்கள் பொது ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை, விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை அன்று இம்மையத்திற்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த 8 ஆயிரத்து 500  பருத்தி மூட்டைகளை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் 1400 லாட்டுகளாக பிரித்து, பொது ஏலம் விட்டனர். 
ஏலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், பருத்தி மூட்டைகளை ஏலம் கூறி மொத்த கொள்முதல் செய்தனர். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.8250 முதல் ரூ.9919 வரை விலைபோனது. 
அதேபோல் பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6850 முதல் ரூ. 8032 வரை விற்பனையானது. சனிக்கிழமை முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம், ரூ.2 கோடியே 30 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.