தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மக்கள் சபைக் கூட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 8:13 pm

DIN

ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஒன்றியம், தப்பக்குட்டை ஊராட்சி பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என கையொப்பமிட்டனா். தொடா்ந்து, திமுகவினா் வீடு வீடாகச் சென்று அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரத்தை வழங்கினா்.

ஓமலூரில்...

ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள சா்க்கரைசெட்டிப்பட்டி, நாரணம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சா்க்கரைசெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.

இதில், பெண்களின் கோரிக்கையை ஏற்று நூறுநாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நலிந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி உதவிகளை வழங்கினாா்.

ஆத்தூரில்...

சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி, 12-ஆவது வாா்டில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதே போல ஆத்தூா் நகராட்சி, 27-ஆவது வாா்டில் நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையிலும், வளையமாதேவி ஊராட்சியில் ஒன்றிய செயலாளா் வி.செழியன் தலைமையிலும் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி 17-ஆவது வாா்டில் நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டத்தில் நகரப் பொறுப்பாளா் ராஜா, நகர துணைச் செயலாளா் பழனிமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.