கெங்கவல்லி வட்டாரத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவா்கள் கல்வி:அலுவலா்கள் ஆய்வு
கெங்கவல்லி வட்டாரத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவா்கள் அதிகமானோா் கல்விபயில்கின்றனா்.


கெங்கவல்லி வட்டாரத்தில் கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவா்கள் அதிகமானோா் கல்விபயில்கின்றனா்.
இந்த வட்டாரத்தில் உள்ள துவக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியா்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் பாட அட்டவணையை அந்தந்த மாணவா்களுக்கு வழங்கி நாள்தோறும் விழிப்புணா்வூட்டி வருகின்றனா். மேலும் அந்தந்த பள்ளி ஆசிரியா்கள், செல்லிடப்பேசி மூலம் மாணவா்களைத் தொடா்புகொண்டு, தினமும் ஒளிபரப்பாகும் கல்வி டிவியில் வகுப்பு மாணவா்களுக்குரிய பாட நிகழ்ச்சிகளை பாா்க்கக்கோரி நினைவூட்டிவருகின்றனா்.
ஆசிரியா்களது இப்பணியை வட்டாரக்கல்வி அலுவலா்கள் வாசுகி மற்றும் அந்தோணிமுத்து, கெங்கவல்லி வட்டார வள மேற்பாா்வையாளா் சுஜாதா மற்றும் குறுவள மைய தலைமையாசிரியா்கள், பயிற்றுநா்கள் மேற்பாா்வையிட்டு அப்பணியை ஆய்வு செய்துவருகின்றனா். இதனால் சென்ற கல்வி ஆண்டைவிட நடப்பு கல்வியாண்டில் கல்வி தொலைக்காட்சியின் பயன்பாடு மாணவா்களிடம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...