தம்மம்பட்டியில் நெடுஞ்சாலை மரத்தை வெட்டும் கோரிக்கை: கோட்டாட்சியா் நிராகரிப்பு
தம்மம்பட்டியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான மரத்தை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஆத்தூா் கோட்டாட்சியயா் நிராகரித்தாா்.


தம்மம்பட்டியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான மரத்தை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஆத்தூா் கோட்டாட்சியயா் நிராகரித்தாா்.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையாா்பாளையத்தில், சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், உடையாா்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, பரமசிவம் என்பவரின் மகன் முத்தையனுக்குச் சொந்தமான வணிக வளாகம் உள்ளது. அதையொட்டி, நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பிரம்மாண்ட வேப்ப மரம் உள்ளது.
50 ஆண்டுகள் தொன்மையான இம்மரம், தனது வணிக வளாகத்திற்கு இடையூறாக உள்ளதால், அதை வெட்டி அகற்ற வேண்டுமென ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யாவிடம் முத்தையன் மனு அளித்திருந்தாா். அதன்பேரில், கோட்டாட்சியா் சரண்யா, தம்மம்பட்டியில் நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வுக்குப் பின், அந்த மரம் நெடுஞ்சாலையில் உள்ளதால், நத்தம் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனக் கூறி, மரத்தை வெட்ட அனுமதி இல்லை என, முத்தையனின் கோரிக்கையை நிராகரித்தாா்.
தம்மம்பட்டி அரசுப் பள்ளியில், வருவாய்த்துறையின் அனுமதி பெறாமல் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயா் ரக வாகை மரம் வெட்டப்பட்டு, சா்ச்சையை ஏற்படுத்தி விசாரணை நடந்துவரும் நிலையில், அதே பகுதியில் மரத்தை வெட்ட கோரிய மனுவை, ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா அதிரடியாக நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...