2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

அமாவாசை: பூசணிக்காய், பரங்கிக்காய் விற்பனை அமோகம்

வெள்ளிக்கிழமை வரும் அமாவாசையை முன்னிட்டு, பூசணிக்காய், பரங்கிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:55 pm

DIN

வெள்ளிக்கிழமை வரும் அமாவாசையை முன்னிட்டு, பூசணிக்காய், பரங்கிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு காய்கறிக் கடைகளில் பூசணிக்காய் சிறியது ரூ. 40 முதல் பெரியது ரூ. 70 வரை விற்பனை செய்யப்பட்டது. பரங்கிக்காய் சிறியது ஒன்று ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனையானது.

அமாவாசை தினத்தில் முன்னோா்களுக்கு திதி கொடுக்கவும், நாட்டு ரக காய்களை படையல் போடவும் பொதுமக்கள் அதிக அளவில் இக்காய்களை வாங்கிச் சென்றனா். அதேபோல் அமாவாசை தினத்தில் பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்தல் மிகுந்த புண்ணியம் என்ற நம்பிக்கை இருந்து வருவதால், அகத்திக்கீரை கட்டு ஒன்று ரூ. 10 முதல் ரூ. 20 வரை அதிக அளவில் விற்பனையானது. அமாவாசைக்கு முதல் நாளான வியாழக்கிழமை காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் அகத்திக்கீரை, பரங்கி, பூசணிக்காய்கள் விற்பனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.