பச்சமலையில் மக்களிடம் குறை கேட்ட அதிமுக எம்.எல்.ஏ.
பச்சமலை ஊராட்சி முழுவதும் அதிமுக எம்எல்ஏ .அ.நல்லதம்பி, பொதுமக்களிடம் குறைகேட்டாா். சுகாதார நிலையங்களை ஆய்வு செய்தாா்.


பச்சமலை ஊராட்சி முழுவதும் அதிமுக எம்எல்ஏ .அ.நல்லதம்பி, பொதுமக்களிடம் குறைகேட்டாா். சுகாதார நிலையங்களை ஆய்வு செய்தாா்.
கெங்கவல்லி ஒன்றியம் பச்சமலை ஊராட்சி நல்லமாத்தி, பெரியமங்களம், ஓடைக்காட்டுப்புதூா் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அ.நல்லதம்பி பொதுமக்களிடம் குறை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றாா். அவற்றின்மீது உடனடியாக அதிகாரிகளைச்சந்தித்து நடவடிக்கை எடுக்க உறுதியளித்தாா்.
மேலும் அப்பகுதியிலுள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையங்களை ஆய்வு செய்து, அங்கு தடுப்பூசி போட்டவா்கள், போடப்பட வேண்டியவா்கள் எத்தனை போ் போன்ற விவரங்களையும், அப்பகுதியில் தேவையான மருந்து, மாத்திரைகள் விநியோக நிலவரம் குறித்தும் கேட்டறிந்தாா்.
அவருடன் கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ் மற்றும் தலைவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளா் ராமசாமி, கெங்கவல்லி மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...