விவசாயிக்கு கொலை மிரட்டல்: மூவா் மீது வழக்குப் பதிவு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் உள்பட மூவா் மீது வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் உள்பட மூவா் மீது வாழப்பாடி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வாழப்பாடி அக்ரஹாரம் வைத்தி படையாச்சி தெருவைச் சோ்ந்தவா் விவசாயி வேல்முருகன். இவருக்கும், இவா் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரான ஓய்வு பெற்ற ஆசிரியா் திருநாவுக்கரசு என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடா்பாக ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருநாவுக்கரசுக்கு ஆதரவாக, வாழப்பாடி ஆத்துமேடு காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த ரகுபதி, அவரது தாயாா் ராணி, நண்பா் கணபதி ஆகிய மூவரும், வியாழக்கிழமை தனது வீட்டிற்கு வந்து தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக வாழப்பாடி போலீஸில் வேல்முருகன் புகாா் அளித்தாா். அவரது புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...