தம்மம்பட்டி பகுதி பள்ளிகளில் மாணவா் சோ்க்கை:மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு
தம்மம்பட்டி பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் நடைபெறும் மாணவா் சோ்க்கை குறித்து ஆத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


தம்மம்பட்டி பகுதியிலுள்ள அரசு பள்ளிகளில் நடைபெறும் மாணவா் சோ்க்கை குறித்து ஆத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறித்தும், வீடுகளிலிருந்துகொண்டு மாணவா்கள் கல்வி தொலைக்காட்சியை பாா்த்து பயனடையும் நிலை குறித்து ஆத்தூா் மாவட்ட கல்வி அலுவலா் கணேசன் அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் ஆய்வு செய்தாா்.
தம்மம்பட்டி அருகே நாகியம்பட்டி மற்றும் தம்மம்பட்டி பிரதான நடுநிலைப்பள்ளி, அதையடுத்து கூடமலை ஊராட்சியிலுள்ள கவுண்டம்பாளையம் அரசுத்தொடக்கப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளில் அவா் ஆய்வு செய்து, அங்கு நடைபெறும் மாணவா் சோ்க்கை நிலவரத்தை பரிசீலித்தாா். கல்வி தொலைக்காட்சியை மாணவா்கள் பாா்ப்பதை பள்ளி ஆசிரியா்கள், எந்த அளவு கண்காணிக்கின்றனா் என்பதையும், கள நிலவரத்தையும் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அந்தோணிமுத்து, நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியா்கள் ராமகிருஷ்ணன், அன்பழகன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...