மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றம்

சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:58 pm

DIN

சங்ககிரி மலைக்கோட்டை நுழைவாயில் பூட்டப்பட்டதால் பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

சங்ககிரி மலை உச்சியில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த பல ஆண்டுகளாக ஆவணி மாத கடைசி சனிக்கிழமையன்று புரட்டாசி மாத வழிபாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டு சென்று புரட்டாசி மாத விரதத்தை தொடங்குகின்றனா்.

மலையின் மையப்பகுதியில் வரதராஜப் பெருமாள் கோயில், குடவரை விநாயகா், நாகா், கோட்டை முனியப்பன், காலபைரவா் சுவாமிகளும் உள்ளன. இக்கோயிலில் உள்ள சுவாமிகளை வழிபட அமாவாசை, பெளா்ணமி, வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தா்கள் அதிகாலை முதல் இரவு 7 மணி வரை சென்று வருகின்றனா்.

இந்நிலையில், ஜூலை 17-ஆம் தேதி ஆடி மாதம் பிறப்பதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை அம்மனை வழிபட சென்ற பக்தா்கள் மலைக்கோட்டையின் நுழைவுவாயில் முன்னறிவிப்பின்றி திடீரென பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு சுவாமியை வழிபட முடியாமல் திரும்பிச் சென்றனா்.

எனவே, ஊா்பொதுமக்கள், பக்தா்கள் மலைக்கோட்டை பூட்டப்பட்டதன் அவசியத்தையும், மலைக்கோட்டை திறந்திருக்கும் நேரத்தை பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை வைக்க வேண்டுமெனவும், தொல்லியல் துறை காவலா் மலையடிவாரப்பகுதியிலேயை தங்கி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நுழைவாயிலை திறந்து வைக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.