தம்மம்பட்டி: பேருந்து நிலைய பெயரிலுள்ள பிழையைத் திருத்த ஆர்வலர்கள் கோரிக்கை

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயர் பிழையாக எழுதப்பட்டுள்ளதை மாற்றக்கோரி சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தம்மம்பட்டி: பேருந்து நிலைய பெயரிலுள்ள பிழையைத் திருத்த ஆர்வலர்கள் கோரிக்கை


தம்மம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயர் பிழையாக எழுதப்பட்டுள்ளதை மாற்றக்கோரி சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தம்மம்பட்டி பேருந்து நிலையம் 1988ல் திறக்கப்பட்டது. அப்போது இப்பேருந்து நிலையத்திற்கு அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் எனப் பெயர் வைக்கப்பட்டது. அண்ணல் என்றால் மரியாதைக்குரிய தலைவர் என்ற பொருள் உண்டு.

அதனால் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு முன், அண்ணல் என்று கூறி அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த இருவருடங்களுக்கு மேலாக, தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. 

அப்போது அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் என்று எழுதப்பட்ட சுவரை, பல்வேறு தரப்பினர் சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் வைத்து தொடர்ந்து மறைத்து வந்தனர்.

இதனைப் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்துவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பேருந்து நிலையம் முழுவதும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டதில், பேருந்து நிலையப் பெயரும் சுண்ணாம்பால் பூசப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு, புதியதாக பேருந்து நிலைய பெயர் எழுதப்பட்டது. அதில் அண்ணல் காந்தியடிகள் என்பதற்குப் பதிலாக அன்னல் என்று தவறாகவும், காந்தியடிகள் என்ற அழகான வார்த்தைக்கு பதிலாக காந்திஜி என்ற வடமொழி எழுத்து இணைக்கப்பட்டு, அன்னல் காந்திஜி பேருந்து நிலையம் என்று எழுதப்பட்டுள்ளது.

தம்மம்பட்டி பேருந்து நிலையத்தின் பெயரை, அண்ணல் காந்தியடிகள் பேருந்து நிலையம் என்று அழகான தமிழில் எழுதப்படவேண்டும் என்றும், அவ்வாறு புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை, வருங்காலத்தில் பழையபடி பிளக்ஸ்,பேனர்கள் வைத்து மறைக்கா வண்ணம், சிறப்பான, நவீன பெயர் பலகை வைக்கப்பட வேண்டும் என்றும் சமூக மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com