மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 14,514 கனஅடியாகக் குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 14,514 கன அடியாகக் குறைந்தது.


மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 14,514 கன அடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 73.29 அடியிலிருந்து 73.51அடியாக உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 16,301 கனஅடியிலிருந்து 14,514 கனஅடியாகச் சரிந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 35.79 டி.எம்.சி.யாக இருந்தது. கடந்த 3 நாள்களில் அணையின் நீா்மட்டம் 1.64 அடி உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...