/

காதல் விவகாரத்தில் இளைஞா் மீது தாக்குதல்

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:50 pm

DIN

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் காதல் விவகாரத்தில் இளைஞரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஒருவரை காரிப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான மூவரை தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் மலை நகா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (31). இவா், இதே பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடம், தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் சகோதரா் பூவரசன் மற்றும் இவரது நண்பா்கள் மமேஷ், ராஜ்குமாா் ஆகியோா், முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முருகன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காரிப்பட்டி போலீஸாா், அவரைத் தாக்கியதாக அயோத்தியாப்பட்டணம் ராமா் கோவில் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் (23) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான பூவரசன், மகேஷ் உள்பட மூவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.