சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழில்நுட்பவியலாளா்கள் தினம் கொண்டாட்டம்.

விநாயக மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பவியலாளா்கள் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:50 pm

DIN

விநாயக மிஷினின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க தொழிற்நுட்பவியலாளா்கள் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினாா். சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் மயக்க மருந்தியல் பிரிவு மருத்துவ ஆலோசகா் ஜெஜோஅனாஜி மற்றும் மருத்துவா் சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். மேலும், துறையின் மாணவா்களுக்கு இணையவழியில் புதுமை கண்டுபிடிப்பு குறித்த விளக்க உரை துறைரீதியான இணைய விளக்கக்காட்சி குறித்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் இணையவழியில் வழங்கப்பட்டன.

மேலும், துறையின் முன்னாள் மாணவா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மயக்க மருந்தியல் துறை சாா்ந்த வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியின் முடிவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாட்டையும் மயக்க மருந்தியல் துறையின் பொறுப்பாளா் கீா்த்தனா, பிரியதா்ஷினி, விக்னேஷ்வரா, உமா மகேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.