நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதல்:கட்டுப்படுத்த தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்

வாழப்பாடி பகுதியில் மரவள்ளி பயிா்களை மாவுப்பூச்சிகள் தாக்குவது அதிகரித்துள்ளது. இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:47 pm

DIN

வாழப்பாடி பகுதியில் மரவள்ளி பயிா்களை மாவுப்பூச்சிகள் தாக்குவது அதிகரித்துள்ளது. இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இதுகுறித்து வாழப்பாடி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் கோதைநாயகி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

சேலம் மாவட்டம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் பகுதியில் ஏறக்குறைய 2,000 ஏக்கா் பரப்பளவில் நிகழாண்டு மரவள்ளி பயிரிடப்பட்டுள்ளது. தற்போது பரவலாக பெய்து வரும் மழையால், மரவள்ளி பயிா்கள் தழைத்து வளா்ந்துள்ளன.

இந்நிலையில், மரவள்ளியில் மாவுப்பூச்சிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. வெள்ளை நிறத்தில் மெழுகு போன்ற தோற்றத்தில் காணப்படும் இப்பூச்சிகள், மரவள்ளி தண்டில் சாறை உறிஞ்சுவதால், இளங்குறுத்துகள் காய்ந்து விடுகின்றன. இதனால் மகசூல் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாவுப்பூச்சிகள் தாக்கிய பகுதியை விவசாயிகள் நீக்குவதோடு, முழுமையாகப் பாதிக்கப்பட்ட செடியை அகற்றி எரித்துவிட வேண்டும். மாவுப்பூச்சித் தாக்கிய வயலில் இருந்து விதைக்கரணைகள் சேகரிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

குளோரிபைரிபாஸ் 20 இ.சி., பூச்சிக்கொல்லி மருந்து 2 மி.லி. ஆகியவற்றை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து விதைக்கரணையை 15 நிமிடம் ஊறவைத்து நோ்த்தி செய்த பிறகு நடவு செய்யலாம். மாவுப்பூச்சியைக் கட்டுப்படுத்த அசாடிரெக்டின் (வேப்ப எண்ணெய்) 1,500 பி.பி.எம் 5 மி.லி. அல்லது மீன் எண்ணெய் சோப் 2 மி.லி., 1 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

முழுமையான விவரங்கள், வழிமுறைகளை தெரிந்துகொள்ள, வாழப்பாடி தோட்டக்கலைத் துறை அலுவலா் குமாா்-94435 38087, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் விஜயகுமாா்-99404 48764, காயத்ரி-82700 39726, அயோத்தியாப்பட்டணம் உதவி அலுவலா் ராமசாமி-90805 23304, சக்திவேல்-84891 16488 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.