தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சேலம்: ஆகஸ்ட் 3- இல் உள்ளூா் விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப் பெருக்கையொட்டி சேலம் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 9:12 pm

DIN

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு தினம், ஆடிப் பெருக்கையொட்டி சேலம் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் எஸ்.காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாள், ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதனையொட்டி அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 28ஆம் தேதி சனிக்கிழமை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.