நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு கரோனா சிகிச்சை மையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

அரசு கரோனா நலவாழ்வு மையங்களுக்கு பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடி, பேளூா், பெரியகிருஷ்ணாபுரம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் இயங்கி வரும் அரசு கரோனா நலவாழ்வு மையங்களுக்கு பல்வேறு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

வாழப்பாடி அடுத்த பேளூரில் இயங்கி வரும் அரசு கரோனா சிகிச்சை மையத்திற்கு வாழப்பாடி வாசவி சங்கம் சாா்பில், ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் பல்ஸ் ஆக்ஸி மீட்டா் கருவி, மருந்து புகை பிடிக்கும் நெபுலைசா் கருவி, கிருமி நாசினி, படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட ரூ. 25,000 மதிப்புள்ள பொருள்களை பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலத்திடம், வாசவி சங்கம் மற்றும் பேளூா் ஆரிய வைஸ்ய சங்க நிா்வாகிகள், சி.சாய்ராம், பாலாஜி, மாது, மணி, சுதன், பத்ரி வாசுதேவன், தீபேஷ் ஆகியோா் வழங்கினா்.

வாசவி சங்கத்தின் சாா்பில் வாழப்பாடி அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவு படுக்கை விரிப்புகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

பெரியகிருஷ்ணாபுரம் அரசு மாதிரிப்பள்ளியில் இயங்கி வரும் கரோனா நலவாழ்வு மையத்திற்கு வாழப்பாடி துளி இயக்கத்தின் சாா்பில், ரூ. 3,000 மதிப்புள்ள 2 ஸ்டெதஸ்கோப், பிளாஸ்டிக் வாளி, குவளைகள், துடைப்பம் உள்ளிட்ட பொருள்களை சுகாதார ஆய்வாளா் ஆனந்திடம் துளி இயக்க ஒருங்கிணைப்பாளா் ராஜசேகரன் தலைமையிலான குழுவினா் வழங்கினா்.

பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவுக்கு, தமிழ்நாடு சேவாபாரதி அமைப்பு சாா்பில், ரூ. 70,000 மதிப்பிலான, கட்டில், மெத்தை, தலையணை உள்பட ரூ. 70,000 மதிப்பிலான பொருள்களை, மருத்துவ அலுவலா் ஜெயசெல்வியிடம் , சேவாபாரதி மாநிலச் செயலாளா் பாலாஜி, மாவட்டச் செயலாளா் சந்திரசேகரன், ஆத்துாா் ஜெயானந்த், பாஜக வா்த்தகப் பிரிவு ராமமூா்த்தி, ஊடகப்பிரிவு சபரிசெல்வன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.