பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சங்ககிரி ஈஸ்வரன் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

News image

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளின் உற்சவமூர்த்திகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்

Updated On :7 ஜூன் 2021, 2:34 pm


சங்ககிரி: சேலம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரியை அடுத்துள்ள பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் கோயில்களில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  உள்ள சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி பால், தயிர், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

அருள்மிகு சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

அருள்மிகு சோமேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இதே போல் சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர், நந்தி பகவான் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு சோமவார பிரதோஷத்தையொட்டி திங்கள்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

இரு கோயில்களிலும் கரோனா வைரஸ் பாதுகாப்பு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகமவிதிகளின் படி இரு கோயில்களின் அர்ச்சகர்கள் மட்டும் பூஜைகளைச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.